ராசிபுரத்தில் பிரியாணி மேளா போட்டி

பிரியாணி மேளா
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பரமத்தி ராஹா ஆயில் நிறுவனம் சார்பில் பிரியாணி மேளா போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோர் பங்கேற்று பிரியாணி சமையல் போட்டியில் பங்கேற்றனர். ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோர் பல்வேறு வகை பிரியாணி சமைத்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் நடுவர்கள் பங்கேற்று சிறந்த பிரியாணி சமையலர்களை தேர்வு செய்தனர். இதில் முதல் பரிசான ரூ.25000 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பரமத்தி ராஹா ஆயில் நிறுவனத்தின் தலைவரும், அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான சு.தமிழ்மணி கலந்து கொண்டு பிரியாணி சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதால் அவர்கள் தனித்திறமை வெளிப்படுகிறது மேலும் பெண்களுக்கு நிகராக இதில் ஆண்களும் கலந்து கொண்டு சிறப்பாக இந்த பிரியாணி போட்டியில் பரிசு பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் அதிக அளவில் சிறப்பாக பணியாற்றுவது போல ஆண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக முன்னேறி வருகின்றனர் என்றும் வாழ்க்கையின் நோக்கமே நோக்கமுள்ள வாழ்க்கை தான் என்ற தாரக மந்திரம் தொடர்ந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதை அனைவரும் சிறப்பாக பின்பற்ற வேண்டும் என்பதும் எனது ஆசை என அவர் இந்த சிறப்பு பிரியாணி போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினார். மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல்வேறு சிறப்பு போட்டிகளும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
