கொடைக்கானலில் வீடுகளின் மீது ஆக்ரோஷமாக ஓடிய காட்டெருமை
கொடைக்கானல் செயிண்ட் மேரிஸ் சாலை குடியிருப்பு பகுதியில் வீடுகளின் தகர ஓட்டின் மேல் காட்டெருமை ஆக்ரோஷமாக ஓடிய நிலையில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் முக்கியப்பகுதியாக செயிண்ட் மேரிஸ் சாலை குடியிருப்பு பகுதி உள்ளது, இந்த பகுதியில் உள்ள சலேத் அன்னை ஆலயத்தின் அருகே 10க்கும் மேற்பட்ட தகர வீடுகள் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்,
இந்நிலையில் இன்று அதிகாலை வேளையில் காட்டெருமை ஒன்று இந்த தகர வீடுகள் அமைந்துள்ள மேற்பரப்பு பகுதியில் உள்ள தகரத்தில் ஆக்ரோஷமாக ஓடியதாக கூறப்படுகிறது, இதில் ராஜன் என்பவரின் வீட்டை கடக்கும் எதிர்பாரத விதமாக தகரம் காட்டெருமையின் பாரத்தை தாங்க முடியாமல் தகரத்தினை உடைத்து கொண்டு வீட்டின் உட் பகுதியில் காட்டெருமை விழுந்துள்ளது,இதனை தொடர்ந்து காட்டெருமை வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் சுற்றியதில் கட்டில்,பீரோ,பிரிட்ஜ் சமையலறை,கதவுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது,
இதனையடுத்து வீட்டின் முன் அறையில் இருந்த தந்தை ராஜன் மற்றும் மகன் எபி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சன்னல்கள் வழியாக வெளியே குதித்து தப்பி வந்துள்ளனர், இதனை தொடர்ந்து இப்பகுதியினர் ஒன்றாக இணைந்து வீட்டிற்குள் இருந்த காட்டெருமை வெளியே செல்ல கதவை திறந்து வழிவகை செய்தனர், மேலும் காட்டெருமை வீட்டிற்குள் விழுந்த இடமானது குழந்தைகள் தங்கும் இடமாக இருந்துள்ளது, நேற்று அவர்கள் வெளியூர் சென்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டெருமைகளை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்றும், வீட்டை சேதப்படுத்திய வீட்டின் உரிமையாளருக்கு்உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.