பேருந்து நிலையத்தில் உலா வந்த காட்டெருமை - பதறி ஓடிய பொதுமக்கள்
காட்டெருமை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப்பகுதிக்குள் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது, இந்நிலையில் நேற்று இரவு வேளையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டெருமை ஒன்று திடீரென பேருந்து நிலையத்திற்குள் உலா வந்தது,
மேலும் பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் சாலையில் சென்ற வாகனங்கள் இடையே நடந்து சென்றது, இதனால் சாலையில் நடந்த மக்கள் பதறியடித்து ஓடினர்,இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நில பகுதிக்குள் சென்றது, இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது, இதனை வனத்துறை கவனம் செலுத்தி மனித விலங்கு மோதல் ஏற்படுவதற்கு முன் நகர்ப்பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை தடுக்கவும், வேட்டை தடுப்பு பணியாளர்களை பணியில் அமர்த்தி காட்டெருமைகள் உலா வருவதை தடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.