விளைநிலங்களை பாழாக்கும் காட்டெருமைகள்!

விளைநிலங்களை காட்டெருமைகள் பாழாக்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் காப்பு வனப்பகுதியில் சுற்றி மட்டும் சுமார் 50 ஏக்கருக்கு மேலாக விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஆற்றுப் பாசனம் இல்லாத சூழ்நிலையில் மழைநீர், நிலத்தடி நீர்மட்டத்தை மட்டும் நம்பி தற்பொழுது 20 ஏக்கருக்கும் அதிகமாக நெல்லும் , மானாவாரி விவசாயம் மூலம் 10 ஏக்கருக்கும் அதிகமாக உளுந்து மற்றும் 10 ஏக்கருக்கு அதிகமாக கொள்ளு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.

தற்பொழுது நெல் பரியும் சூழ்நிலையில் காட்டு மாடுகள் மற்றும் காட்டெருமைகள் புகுந்து விவசாய நிலத்தை நாசம் செய்து வருகின்றன. மேலும் இரவில் நெற்பயிர்களை மேய்ந்து விட்டு செல்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மேலும் உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவற்றையும் காட்டெருமைகள் மேயந்துவிட்டு செல்கின்றன. காட்டெருமைகளை விரட்டுவதற்காக வீட்டில் இருக்கும் துணி,சேலை,வேட்டி பை போன்ற பொருட்களைக் கொண்டு அதனை திசை திருப்பம் முயன்றாலும் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.

இதனால் இரவில் கண்விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தாலும் நெற்பயிரிகளை காட்டெருமைகள் மற்றும் காட்டு மாடுகள் அழித்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் வனத்துறையினர்கள் அவர்களின் எல்லையில் அகழிகள் அமைத்து விவசாய நிலத்தை காக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story