பாகற்காய் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.8 குறைந்தது

உழவர் சந்தைகளில் ரூ.36-க்கு விற்பனை
பாகற்காய் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.8 குறைந்தது உழவர் சந்தையில் ரூ.36-க்கு விற்பனை தர்மபுரி, ஜன.3: தர்மபுரி மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் பாகற்காய் விலை ஒரேநாளில் கிலோவிற்கு ரூ.8 குறைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் 1 கிலோ ரூ.36-க்கு விற்பனையானது. பாகற்காய் சாகுபடி தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கசப்பு சுவை கொண்ட பாகற்காய் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. கூட்டு, பொரியல்,சாம்பார், வத்தல் குழம்பு ஆகிய வற்றில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. ரூ.8 விலை குறைந்தது தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சந்தைக்கு பாகற்காய் வரத்து கணிசமாக குறைந்தது. இதனால் அதன் விலை அதிகரித்தது. தர்மபுரி மாவட்டதில் உள்ள உழவர் சந்தையில் 1கிலோ ரூ.44- க்கு விற்பனையானது. இந்நிலையில் சந்தைக்கு பாகற்காய் வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.8 விலை குறைந்தது. உழவர் சந்தைகளில் நேற்று 1 கிலோ ரூ.36-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் 1கிலோ ரூ.45 வரை பல்வேறு விலைகளில் விற்பனையானது.

Tags

Next Story