பாஜக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாஜக கூட்டணி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தென்காசியில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தென்காசி நாடாளுமன்ற பாஜக கூட்டணி வேட்பாளர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரபாண்டியபுரம், பேரூராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி புதிய தமிழக கட்சி மாவட்ட செயலாளர் இன்பராஜ் மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொடர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொடர்களும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story