பாஜக சட்டமன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜக சட்டமன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சங்ககிரியில் பாஜக சட்டமன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சங்ககிரியில் பாஜக சட்டமன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம் பாஜக மேற்கு மாவட்டத்தின் சார்பில் சங்ககிரி சட்டமன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் சங்ககிரியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவரும் சட்டமன்ற அமைப்பாளரான சு.சுதிர்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற இணை அமைப்பாளருமான ரமேஷ்கார்த்திக் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளரும், சட்டமன்ற பொறுப்பாளரான கே.கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவரும், நாமக்கல் மக்களவை தொகுதி பொறுப்பாளரான வி.பி.துரைசாமி சிறப்புரையாற்றினார். இதில் தமிழகம் மழைநீரால் பாதிக்கப்பட்ட போது மத்தியரசு தணிக்கைக்கு உட்பட்டு நிவாரணத்தொகையை வழங்கியுள்ளது. தமிழகம் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து மாநிலத்தலைவர் அண்ணாமைல மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து சேதவிவரங்களை விளக்கி நிதி ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளார். மத்தியரசு முதலில் பேரிடர் மேலாண்மை குழுவினரை அனுப்பி பொதுமக்களை காப்பாற்றியுள்ளது. தமிழக மக்களுக்கு பாஜக முன்னுரிமை அளித்து வருகிறது. பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களுக்கும் பதவி தரப்படுகின்றன என்பது அண்மையில் பாஜக வெற்றி மூன்று மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்திலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தமிழகத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை மாநிலத்தலைவர் அண்ணாமலை பொதுமக்களித்தில் தெரிவித்துள்ளார். எனவும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தற்போது நீதிமன்றம் தண்டனை வழங்கி வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் போது ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் சந்திப்பார். அதே போல் மாநிலத்தலைவர் அண்ணாமலை அரசின் வெளியீடுகளை வைத்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தமிழகத்தில் அடுத்த முதலமைச்சராக அண்ணாமலை வருவார். மத்தியரசு விஸ்கர்மா என்ற திட்டத்தை அறிவித்து அதில் 18 பிரிவு மக்களுக்கு கடனுதவி அளித்து அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவி வருகிறது. தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பாரத பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் தமிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் தமிழகத்தில் இருந்து வெற்றி பெறும் போது முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது போல் அணைகள், நீர் தேக்கங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நீட்தேர்வு நடைபெறுகிறது. திமுக அரசு அதனை புரிந்து கொள்ளாமல் பாஜகாதான் காரணம் என்று கூறுகின்றனர். திமுகவினர் அவர்களது வழக்கறிஞர் பிரிவை கொண்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து விலக்கு கோர வேண்டும் என்றார். மேலும் அவர் அண்மையில் திமுக அமைச்சருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் அளித்த பேட்டியை தொகுதி முழுவதும் பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் தெரியபடுத்தவேண்டும். சங்ககிரி சட்டப்பேரவையில் 311 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இம்மையங்களுக்கு பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியரசின் திட்டங்களை பொதுமக்களிடத்தில் எடுத்துக்கூறி வருகின்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டுமென பேசினார். அப்போதுநாமக்கல் மக்களவை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, இணை அமைப்பாளர் ராஜேஷ்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் அமுதா, சாந்தாமணி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். -

Tags

Next Story