தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் பாஜக - விஜய்வசந்த் எம்.பி
விஜய் வசந்த் எம்பி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் எம் பி போட்டியிடுகிறார். அவர் நேற்று நாகர்கோவில் உள்ள எம் பி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- மத்தியில் பாரதிய ஜனதா அரசு கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. மத்தியில் இந்திய கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவை ஆளும் அந்த காலம் இந்த தேர்தல் மூலம் வரும்.
பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்தின் போது என்னை பகுதி நேர எம்பி என்று கூறியதாக சொல்கிறீர்கள். எம் பி - கான பதவி காலம் ஐந்து ஆண்டுகள். அதனால்தான் எனது தந்தையின் மறைவுக்கு பின் நான் எம் பி - யானவன். நடை பெறவுள்ள தேர்தலில் நான் முழுநேர எம்பியாக அதாவது ஐந்தாண்டு காலம் இருப்பேன் என்பதை பதிவு செய்து கொள்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் தக்கலையில் ரோடு ஷோ.நடத்துவதால் குமரி மாவட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. தேர்தல் நேரத்தில் கனிம வளம் குறித்து பாரதிய ஜனதா பேசியிருப்பதை அரசியலாக தான் பார்க்க முடிகிறது. சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதாவினர் இவ்வாறு பேசி வருகிறார்கள். இவ்வாறு விஜய் வசந்த் எம் பி கூறினார்