மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் அல்ல நாங்கள் - பொன்னார்

மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் அல்ல நாங்கள் - பொன்னார்

பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்  

காங்கிரஸ் கட்சி மோதலை உருவாக்கி குளிர்காய நினைக்கிறது. வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், வீழ்ந்தால் ஒன்றாக வீழ்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சிப்பாறை பேச்சி அம்மன் கோவிலில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர் அந்த பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசியதாவது,நான்கு வழிச்சாலை திட்டத் திற்கு அனைத்து முயற்சிகளும் பாரதிய ஜனதா ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டது. நான் அந்த துறையின் அமைச்சராக இருந்தபோது அந்த பணியை துரிதப்படுத்தினேன். நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக அமைச்சர் மனோ தங்கராஜ் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் கடத்தலுக்கு துணை கடத்தல் மூலமாக இது வரை 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். நரி குளத்தில் பாலம் அமைக்க 2004-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

காஷ்மீர்-கன்னியாகுமரியை இணைக்கும் முக்கிய பாலமாக அமைந்தது. ஆனால் அந்த திட்டத்தையே கிடப்பில் போட் டார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டத்தை நாங்கள் முடித்தோம். கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை பயங்க வாத இயக்கம் என்று கூறியுள்ளார். அதற்கு மனோ தங்கராஜ், விஜய்வசந்த் பதில் கூறவேண்டும். மானமுள்ளவர்கள் இந்த கூட்டணியில் இருப்பார்களா. எய்ம்ஸ் மருத்துவமனை தேர்தல் முடிந்தவுடன் கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டு விரைவில் பணிகள் முடிக்கப்படும். குமரி மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப் படும். மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்கள்.மக்களை ஒன்றிணைத்து செழிப்படைய செய்பவர்கள் தான் தாமரை இயக்கத்தை 1. சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சி மோதலை உருவாக்கி குளிர்காய நினைக்கிறது. வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம் வீழ்ந்தால் - ஒன்றாக வீழ்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம்.காழ்ப்புணர்ச்சி அரசியலை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story