சிவகாசி அருகே வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளர்களிடம் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரித்தார்.

சிவகாசி அருகே,பட்டாசு தொழிலாளர்களிடம், நடிகை ராதிகா சரத்குமார் வாக்கு சேகரிப்பு.விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில்,நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி அருகேயுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பட்டாசு தொழிலாளர்களிடம் அவர் பேசும் போது,மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி வரும்.அப்போது பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் யாவும் தீர்க்கப்படும்.பட்டாசு தொழிலையும்,பட்டாசு தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்காக என்னுடைய குரல் ஓங்கி ஒலிக்கும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.நடிகை ராதிகாவுடன் அவரது கணவர் நடிகர் சரத்குமார் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story