சிபிஎம் வேட்பாளரை விமர்சித்த பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன்
பாஜக வேட்பாளர்
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜக சார்பில் மதுரையில் போட்டியிடவுள்ள பேராசிரியர் ராம சீனிவாசன் இன்று தனது வேட்பு மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கீதாவிடம் தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது மேளதாளங்கள் முழங்க கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு தனது வேட்பமானவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தமிழகத்தில் மோடி அலை வீசி வருகிறது. அதை மையமாகக் கொண்டு மதுரை பாராளுமன்றத்தில் பாஜகவின் சாதனைகளை கூறி வெற்றி பெற உள்ளோம்.
காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தேர்தல் பத்திரத்தில் வந்த பணத்தை எப்படி செலவு செய்வார்களோ அதே போல் பாஜகவும் செலவு செய்யும். எங்களின் தேர்தல் செலவுகள் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் மதுரையின் முன்னாள் எம்பி சு வெங்கடேசன் என்ன சாதனைகள் செய்தார் என்பது எங்களுக்கு தெரியாது.
150 சாதனைகள் செய்தார் என்று கேள்விப்பட்டோம் அதனோடு நடிகர் நடிகை சூர்யா ஜோதிகாவை கீழடிக்கு அழைத்துச் சென்று போட்டோ சூட் எடுத்ததை 151 வது சாதனையாக அவர் சேர்த்துக் கொள்ளட்டும் என்று பாஜக மதுரை வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன் பொறுப்பாளர், அமமுக நிர்வாகிகள், ஐஜேகே கட்சியினர், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.