தேர்தல் விதிமுறைகளை மீறிய பாஜக வேட்பாளர்!

தேர்தல் விதிமுறைகளை மீறிய பாஜக வேட்பாளர்!

 வேட்புமனு தாக்கல்

அதிக நபர்களுடன் ஆட்சியரிடம் மனுதாக்கல் செய்த அண்ணாமலை.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மக்களவை வேட்பாளர் அண்ணாமலை இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அதிமுக அலுவலகம் அருகே கூடி இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இணைந்து வாகனத்தில் ஊர்வலமாக செஞ்சிலுவை சங்கம் வரை ஊர்வலமாக வந்த அண்ணாமலை அங்கிருந்து கார் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அக்கட்சியின் மாநில துணை தலைவர் துரைசாமி,சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,கோவை மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ சின்னராசு,விவசாயிகள் அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜ்,தேசிய குழு உறுப்பினர் ஜி.கே.செல்வகுமார், மாநில தேர்தல் பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பலர் வேட்பு மனு தாக்கலின் போது உடன் இருந்தனர்.வேட்பு மனு தாக்கலின் பொழுது ஐந்து பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில் கூடுதலான நபர்கள் வேட்புமனு தாக்கலின் போது உடன் இருந்தனர்.இவர்களுடன் பா.ஜ.க ஐடி விங் நிர்வாகிகளும் புகைபட கலைஞர்களும் வேட்புமனு தாக்கலின் போது உடன் இருந்தனர்.

Tags

Next Story