பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பா.ஜ.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.


குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பா.ஜ.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய பிரதமராக மீண்டும் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் பா.ஜ.க.. சார்பில் ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு பகுதிகளில், மாவட்ட விளையாட்டுத்துறை தலைவர் நாகராஜ் தலைமையில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நரேந்திர மோடி வாழ்க, பா.ஜ.க. வாழ்க, என கோஷமிட்டனர். தரவு மேலாண்மை மாவட்ட துணை தலைவர் விவேக்பாலாஜி, மாநில ஓ.பி.சி. அணி செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட செயலர் கோவிந்தராஜ், நகர தலைவர் சேகர், நகர துணை தலைவர் சீனிவாசன், நகர பொது செயலர்கள் மணிகண்டன், கலைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story