தி.மு.க.அரசை கண்டித்து நாமக்கல்லில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 150க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இதுவரை 55 பேர் இறந்துள்ளனர்.இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தவெக, உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், பா.ஜ.க. சார்பில், தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல்லில், கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில், நேற்று மாலை நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கள்ளச்சாராயம் குடித்து இறந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 12 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு, பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story