பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜகவின் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை பகுதியில் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது .பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் தனபால் பேசியதாவது: வரும் தேர்தலில் மோடி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி ஆகிவிட்டது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக ஜெயிக்க வேண்டும். இதற்கான ஆயத்து பணிகளை எப்போதும் செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.இதை சாதகமாக நாம் பயன்படுத்தி மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story