வித்தியாசமான உடை அணிந்து கவனத்தை ஈர்த்த பாஜக கவுன்சிலர்
பாஜக கவுன்சிலர்
திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில், மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வருகை தந்த மாநகராட்சி 14வது வார்டு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் தனபால், தனது 14 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பல மாதங்களாக கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை என்றும், பணிகளை வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளதாகக் குற்றம்சாட்டும் அவர், தனது பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் எப்போது முடித்துக் கொடுக்கப்படும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாநகராட்சி கூட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிரச்சனைகளை புகைகடமாக பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட் அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அந்த டி-ஷர்ட்டில். என்று முடியும் பணி..? எப்போது விடியும் இனி… என்ற வாசகமும், 14வது வார்டு பகுதியில் உள்ள சுகாதார சீர்கேடுகள், பாதாள சாக்கடை வழிந்து ஓடியது போல புகைப்படங்களும் இடம் பெற்று இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.