பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தல் மற்றும் கனிம வளங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துக்கள், உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்த வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மீனா தேவ், மாநில மகளிரணி தலைவி உமாரதி முன்னிலை வகித்தனர். எம் ஆர் காந்தி எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பேசுகையில், - குமரியில் கனிம வளங்கள் விதிகளை மீறி கடத்தப்படுகிறது. லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட அதிக கனிமங்களை கொண்டு , அதிக வேகத்தில் செல்வதால், விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் தொடர்கின்றன.

எனவே அரசு குமரியில் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story