பாஜக- திமுக ரகசிய உறவு : அதிமுக துண்டு பிரசுரம்

துண்டு பிரசுரம் வழங்கிய அதிமுகவினர்


பெரம்பலூரில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் பாஜக ,திமுக இடையே ரகசிய உறவு குறித்து அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கினர் .
அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், மதர்ஸா சாலை, வடக்கு மாதவி சாலை ஆகிய பகுதி மற்றும் நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில், திமுக மற்றும் பாஜக ரகசிய உறவை இஸ்லாமியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பெரம்பலூர் நகரக அதிமுக செயலாளர் இராஜபூபதி தலைமையில் பாஜக திமுக இடையேயான ரகசிய உறவுகளை எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் பெரம்பலூர் நகர வார்டு செயலாளர்கள் மற்றும் பாசறை சார்ந்த நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story



