பா.ஜனதா கிழக்கு மாவட்ட புதிய செயலாளர் நியமனம்

பா.ஜனதா கிழக்கு மாவட்ட புதிய செயலாளர் நியமனம்

நியமனம் 

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவாரப்பட்டி ஊராட்சியை சேர்ந்த என்.பி.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவாரப்பட்டி ஊராட்சியை சேர்ந்த என்.பி.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரின் உத்தரவின்படியும், மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் மற்றும் மாவட்ட மைய குழு ஒப்புதலுடன் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இவர் பா.ஜனதா விவசாய அணியின் கோவை மண்டல திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளராகவும் பதவி வகித்துள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள என்.பி.கருணாகரனுக்கு கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story