பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜக ஆலோசனை கூட்டம் 

நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்
கள்ளக்குறிச்சி எஸ்.எம்.டவர் மீட்டிங் ஹாலில் நடந்த கூட்டத்திற்கு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், ஜெயதுரை, தியாகராஜன் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சங்கர், மாவட்டத் தலைவர் அருள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் வரும் ஜன., 1ம் மற்றும் 2 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, மத்திய அரசின் நலத்திட்டங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் பிரேம்ராஜ், செல்வராஜ் மாவட்ட செயலாளர்கள் தியாகராஜன், விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள் பாரதி, ராஜீ, சுரேஷ், பாலா, சந்திரலேகா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story