பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சங்ககிரியில் பாஜக ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு மாவட்டத்தலைவர் சுதிர்முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
சேலம் மேற்கு மாவட்டம் பாஜக சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் பாஜக ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்டத்தலைவர் சுதிர்முருகன் தலைமையில் நடைபெற்று. இக்கூட்டத்தில் பாஜக நிர்வாகியும், உத்தரபிரேதச மாநிலங்களவை உறுப்பினருமான அர்நாத் சிங் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.அப்போது ஜனதா கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உருவான போது இருவர் மட்டுமே மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றனர். அதில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் சூரியன் உதிக்கும் போது தாமரை மலரும் என்று கூறியதையும் அதன்பின்னர் அனைத்து மாநில நிர்வாகிகளின் உழைப்பினால் இன்று உத்தரபிரதேசம், வடமாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருவதாகவும் சேலத்தில் பொதுமக்கள் மத்தியரசின் திட்டங்கள் குறித்து தெரியவில்லை என்கின்றனர். மத்தியரசு வீடு கட்டும் திட்டம், மருத்துவகாப்பீட்டுத்திட்டம், இலவச எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனை பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறவும், அவற்றை அவர்களுக்கு பெற்றுத்தரவும் அனைத்து பகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகளை நியமனம் செய்து அதனை மாவட்டத்தலைவர் கண்காணிக்க வேண்டும் எனவும்.மத்தியரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கத்தில் தமிழகரசு செயல்பட்டு வருகின்றது. பாரத பிரதமர் மோடி 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு உறுதுணையாக கட்சி நிர்வாகிகள் அனைவரும் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி பிரதமரின் நோக்கத்தை செயல்படுத்த பணியாற்றி வேண்டும் இவ்வாறு செயல்படும் போது விரைவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் முன்னாள் பாரதபிரதமர் வாஜ்பாய் கூறியது போல் சூரியன் உதிக்கும் போது தாமரை மலரும் எனவும் பேசினார். இக்கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொதுச்செயலர் கலைச்செல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்கார்த்திக், மண்டலத்தலைவர் சமுருகேசன், சேலம் மேற்கு மாவட்ட விருந்தோம்பல் பிரிவு மாவட்டத்தலைவர் பொன்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story