இருப்பதையும் பறிக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்படுகிறது-திமுக வேட்பாளர்
வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான இந்தியாக் கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ப ராஜ்குமார், கோவை காந்திபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் “ ஓன்றிய பா.ஜ.க அரசு பொதுமக்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை எனவும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கோவையில் இருந்து நேரடி ரயில் சேவைகள் கூடுதலாக இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் ஆனால் ஒன்றிய அரசு இருப்பதையும் பறிக்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போது இயக்கப்படும் பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது எனவும் தொழில் நகரமான கோவைக்கான தேவையே அதிகம் உள்ள நிலையில் அந்த ரயிலை பாலக்காடு வரை நீட்டித்தால் கோவை மக்களுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படும் என்றார்.
ஒரு தொழில் நகரத்துக்கு சரியான போக்குவரத்து வசதிகள் இருந்தால் மட்டுமே அது மென்மேலும் வளர்ச்சியடையும் ஆனால், ஒன்றிய அரசோ ஜி.எஸ்.டி வரியை அதிகரித்து கோவையின் சிறு, குறு தொழில்களை நலிவடையச் செய்ததோடு அடிப்படைத் தேவைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இப்படி இருந்தால் நாம் முன்னேறுவது எப்படி?என கேள்வி எழுப்பி அவர் இது கோவை மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? எனவும் இந்த துரோகிகளோட கள்ளக் கூட்டணியில் இருக்கும் அதிமுக, கோவை நலனுக்காக ஏதாவது குரல் எழுப்பியதாக உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனவும் அவர்கள் எப்படி கேள்வி எழுப்புவார்கள்? அவர்கள்தான் தங்கள் எஜமானர் மோடியிடம் கை கட்டி அடிமைகளாக நிற்கிறார்களே” என்றார்.
பிரச்சாரத்தின் போது தமிழக அரசின் வெற்றிகரமான மக்கள் நலத் திட்டங்களைப்யும், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் தோல்விகளையும் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்!இந்த பரப்புரையின்போது மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் மற்றும் கட்சியினர் ஆதரவு திரட்டினார்.