காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் பா.ஜ., மாநாடு நடத்த முடிவு

X
பாஜக கூட்டம்
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், லோக்சபா தேர்தல் குறித்து, மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி பா.ஜ., அணி பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், லோக்சபா தொகுதி அமைப்பாளர் ராகவன் தலைமையில், செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி தேர்தல் குறித்த மாநாடு மற்றும் தேர்தலில் பணியாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டது. மாநில செயலர் டால்பின் ஸ்ரீதர் பேசுகையில், 'லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெறும். தேர்தல் பணியில் ஈடுபடும் நிர்வாகிகள், களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். பா.ஜ.,வை எதிர்நோக்கி இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர்' என்றார்.
Tags
Next Story
