பெருங்குடி சிறுவனுக்கு நிதி உதவி வழங்கிய பாஜக
பெருங்குடி சிறுவனுக்கு நிதி உதவி வழங்கிய பாஜக
மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் இன்று இரவு அந்தப் பகுதியை சேர்ந்த கணபதி (28), விஜய் குட்டி (25), அஜித் (24) உட்பட இன்னும் நான்கு ஐந்து பேர் ஊருக்குள் உள்ள நாடக மேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவர் இடம் கண்ணா எங்கிருக்கிறான் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று கூறவே திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை வெட்டத் தொடங்கியுள்ளார், இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடவே அஜித், விஜய் குட்டி, கணபதி என மூன்று பேரை வெட்டியதில் அவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(48) என்னும் கூலி தொழிலாளி தனது பேரன் சார்வின்(6) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போது கூச்சல் சத்தம் கேட்டு நாடக மேடை அருகே சென்று பார்க்க முற்பட்டபோது அந்த இருவர் திடீரென பெரியசாமி மற்றும் அவரது பேரன் ஆறு வயது சிறுவன் சர்வினையும் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவும் சுதாரித்துக் கொண்ட அந்த இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வந்த இருவர் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சனை காரணமா, அவர்களுக்குள் எதுவும் முன் பகையா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் ஊருக்குள் புகுந்து முன் பின் தெரியாத ஐந்து பேரை திடீரென இரண்டு மர்ம நபர்கள் வெட்டியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பெருங்குடி சௌராஷ்ட்ரா காலனி சேர்ந்த மாரி மற்றும் சசி ஆகிய இருவர் மீது எஸ்சி எஸ்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் தலைமையில் பட்டியல் அணி மாநிலத் துணைத் தலைவர் ஆதீனம் மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து மதுரை மேற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் முத்து மாரி, மதுரை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாரதிராஜா பட்டியல அணி மேற்கு, கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் G மலைச்சாமி, S மலைச்சாமி K.P.மணிகண்டன உட்பட பாஜகவினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும் நிதி உதவியும் வழங்கினர்.
மேலும் இதுகுறித்து பேட்டி அளித்த கதலி நரசிங்கபெருமாள் கூறுகையில், மதுரை பெருங்குடி நடைபெற்ற சம்பவம் மிகவும் கொடூரமான சம்பவம் இந்த தாக்குதல் மிகவும் கண்டனத்திற்கு உடையது, இச்சம்பவத்தால் சிறுவன் உட்பட நான்கு பேர் ஒரு வாரமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் ஆறு வயது சிறுவன் இரண்டு கால்களும் படுகாயம் இருந்து மிகவும் பரிதாபத்துடன் சிகிச்சை பெற்று வருகிறான்,இந்த சம்பவம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை மிகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் இது போன்ற சம்பவங்கள் பட்டியல் இனத்தவர்கள் மீது அதிகமாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற வருகின்றன இது போன்ற செயல்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்று கூறினார்.மேலும் மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோளுக்கிணங்க நாங்கள் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருபவர்களைநேரில் சந்தித்து ஆறுதல் கூறியும் நிதி உதவியும் வழங்கினோம் என்றார்.