பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றும் பா.ஜ.க - விஜய் வசந்த் எம்.பி.

பொய்யான வாக்குறுதியை அளித்து ஏமாற்றும் பா.ஜ.க  - விஜய் வசந்த் எம்.பி.
விஜய் வசந்த் பிரச்சாரம்
10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர். மீண்டும் பொய்யான வாக்குறுதிகளையே கூறி வருகின்றனர். ஒன்றியத்தில் உள்ள பா.ஜ. ஆட்சியை தூக்கி எறியும் நேரம் வந்து விட்டது என தேர்தல் பரப்புரையின் போது விஜய் வசந்த் எம்.பி பேசினார் .

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங். வேட்பாளர் விஜய் வசந்த் குளச்சல் சட்டமன்ற தொகுதி பகுதியில் காலை 9 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 2019ல் எனது தந்தை வசந்தகுமாரை வெற்றி பெற செய்தீர்கள். பல்வேறு நல்ல திட்டங்களை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர். மீண்டும் பொய்யான வாக்குறுதிகளையே கூறி வருகின்றனர். ஒன்றியத்தில் உள்ள பா.ஜ. ஆட்சியை தூக்கி எறியும் நேரம் வந்து விட்டது. வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு , புதுவையையும் சேர்த்து நாற்பது தொகுதிகளிலும் வெல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து கொல்லன்விளை, சிந்தன் விளை, செல்லங்கோணம், வட்ட விளை, ஓலவிளை, கருக்கி, முருங்கவிளை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் , வட்டார தலைவர் பொன் சாலமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story