திமுக.,வை போல ஊழல் கட்சி அல்ல பா.ஜ., - அண்ணாமலை

திமுக.,வை போல ஊழல் கட்சி அல்ல பா.ஜ., - அண்ணாமலை

திமுக.,வை போல ஊழல் கட்சி அல்ல பா.ஜ., என திருப்பத்தூரில் பாதயாத்திரை மேற்கொண்ட அதன் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 

திமுக.,வை போல ஊழல் கட்சி அல்ல பா.ஜ., என திருப்பத்தூரில் பாதயாத்திரை மேற்கொண்ட அதன் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாத யாத்திரை மேற்க்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை யில் பாத யாத்திரை மேற்கொண்டார். இதில் மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

இதில் பேசிய பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். இந்தியா என்றால் ஊழல் நாடு என இருந்தது. காங்கிரஸ் கட்சி 12 லட்சம் கோடி ஊழல் செய்தது. காங்கிரஸ் கட்சியுடன் எல்லாம் கட்சியும் சேர்த்து கூட்டு சேர்ந்து ஊழல் செய்தார்கள். ஊழலை ஒழிக்கக்கூடிய கட்சி வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் போது தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.

கடந்த 10 ஆண்டுகாலத்தில் இதுவரை எந்த ஊழலும் நடைபெற வில்லை. தற்போது எதிர்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியது நிதிஷ்குமார். ஆனால் தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து விட்டார். அடுத்த பிரதமர் மோடி தான். தனிபெருமான்மையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. காஷ்மீர் மீது தடை இருந்தது. பாஜக ஆட்சி அமைத்த பிறகு காஷ்மீர் மீது இருந்த ஆர்டிக்கல் 370 நீக்கினோம். ராமருக்கு கோயில் கட்டியே தீருவோம் என்று முடிவு எடுத்து செய்து காட்டியுள்ளோம். சென்ற ஆட்சியில் கண்ட இடங்களில் குண்டு வெடித்தது. ஆனால் தற்போது நாடு அமைதியாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா பொருளாதாரத்தில் கடைசி இடத்தில் இருந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளோம். 2024 பாராளுமன்ற தேர்தல் நமக்கான தேர்தல் கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் நடந்துக்கிட்டு கொண்டிருந்தது குடும்ப அரசியல். எல்லாமும் குடும்ப அரசியல் தான் நடக்கிறது. எல்லா அமைச்சரின் வாரிசுகள் தான் தற்போது பொறுப்பு வகிக்கின்றனர். குடும்ப ஆட்சி எங்கேயும் கிடையாது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் குடும்பு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. தற்போது 11 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் உள்ளது. கடந்த 8 மாதமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இதுவரை அமைச்சராக உள்ளார். பொன்முடியும் சிறையில் உள்ளார். இதேபோன்று தொடர்ந்தால் அனைத்தும் அமைச்சர்களும் இலாக்கா இல்லா அமைச்சர்களாக இருப்பார்கள். ஊழலற்ற ஆட்சி வேண்டுமானால் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களியுங்கள்.

உங்கள் ஊருக்கு தனி சிறப்பு உண்டு இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது. ஆட்சியாளர்களுக்கு உங்கள் ஊரின் மீது அக்கறை இல்லை. முதல் அமைச்சர் துபாய் சென்று முதலீட்டாளர்களுடன் பேச செல்வதாக சொன்னார். என் மீது மான நஷ்ட ஈடு வழக்கு போட்டார்கள். உங்களுக்கு மானமே கிடையாது. அப்புறம் எதுக்கு நஷ்ட ஈடு என்றேன். தமிழ்நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வந்தார்களா? இந்தியா அளவில் உத்திரபிரதேசம் முதலீட்டாளர்கள் 33.5.லட்சம் கோடி வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வரவில்லை. தற்போது பொருளாதாரத்தில் 3 வது இடத்திற்கு சென்றுள்ளது. லஞ்சம் கொடுக்காமல் முதலீடு செய்ய மற்ற மாநிலங்களுக்கு செல்கிறார்கள். ஏழை குழந்தைகள் உலக தரம் வாய்ந்த படிப்பு வேண்டும் என்றால் மத்திய அரசால் நடத்தப்படுகிற பள்ளியில் சேர்த்து பயன்பெறுங்கள் என்றார்.

ஜோலார்பேட்டையில் வளர்ச்சி அடைய வேண்டுமானால் சிப்காட் அமைந்திருக்க வேண்டும். பிரதமர் மோடி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு 16 கோடி ஒதுக்கி உள்ளார். அந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் பாரத‌பிரதமர் இலவச வீடு கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. தூய்மை இந்தியா காந்தி கண்ட கனவு அதை காங்கிரஸ் கட்சி செய்ய முடியவில்லை. அதை பாஜக கட்சி செய்துள்ளது. அதேபோல் இலவச கேஸ் சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதியை எந்த ஆட்சியும் ஒழிக்க வில்லை. சாராயம் காய்ச்சுபவன் எல்லாம் அமைச்சர். உங்கள் ஒரு ஓட்டு எல்லாத்தையும் மாற்றும் என்றார்.

Tags

Next Story