டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் : பாஜக பிரமுகர் கோரிக்கை

X
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பாஜக பிரமுகர் கோரிக்கை
தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பாஜக பிரமுகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பாஜக பிரமுகர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காய்கறி மார்க்கெட் அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் உள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
