அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு பைக்கில் செல்லும் பா.ஜ.க.,வினர்

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு பைக்கில் செல்லும் பா.ஜ.க.,வினர்

பைக்கில் பயணம் செய்யும் பா.ஜ.க.,வினர்

தூத்துக்குடியிலிருந்து உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் 2 பா.ஜ.க உறுப்பினர்கள் சென்றனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலுக்கு தூத்துக்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் பா.ஜ.க உறுப்பினர்கள் ஜி. அய்யப்பன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் இன்று புறப்பட்டனர். 2440 கிலோ மீட்டர் தூரம் பயணம் செல்லும் இவர்களை எஸ்.வி.எஸ்.கே. சபா நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக தூத்துக்குடி வைகுண்டபதி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தெப்பக்குளம் தெருவில் உள்ள எஸ்.வி.எஸ்.கே. சபாவில் ராமர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில், எஸ்.வி.எஸ்.கே. சபா நிர்வாகிகள் எஸ்.ஆர். எஸ்.பாலாஜி, கார்ப்பரேசன் குருமூர்த்தி, தாம்ப்ராஸ் பாலாஜி, வைகுண்டபதி கமிட்டி உறுப்பினர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story