தென்னைவிவசாயிகள் வாழ்வாதாரம் காக்க பாஜகவினர் தேங்காய் ஏந்தி போராட்டம்

தென்னைவிவசாயிகள் வாழ்வாதாரம் காக்க பாஜகவினர் தேங்காய் ஏந்தி போராட்டம்
பாஜக ஆர்ப்பாட்டம்
தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க பாஜகவினர் தேங்காய் ஏந்தி போராட்டத்தில ஈடுபபட்டனர்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பாஜக விவசாய அணியினர் தேங்காய்கள், தேங்காய் எண்ணெய் பாட்டில்களை ஏந்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் எம். தங்கவேல் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணைத் தலைவர் பண்ணைவயல் ஆர். இளங்கோ, பொதுச் செயலர் பூண்டி எஸ்.வெங்கடேசன், பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி.ஜெய்சதீஷ், பொதுச் செயலர் துரை. வீரசிங்கம், பொருளாளர் வி. விநாயகம் முன்னிலை வகித்தனர்.

இதில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கொப்பரை தேங்காய்களை மாநில அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நியாய விலைக்கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய்யை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் எம்.ராஜேஸ்வரன், மருத்துவர் அணி பாரதிமோகன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் நெப்போலியன் சேவியர், மண்டலத்தலைவர்கள் காமராஜ், பாலகுமார், கண்ணதாசன், நாகராஜ், மகளிரணி நிர்வாகிகள் குயிலி, கவிதா, மாவட்டத் துணைத் தலைவர் பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story