ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் தீபம் ஏற்றி பாஜகவினர் வழிபாடு
பாஜகவினர் வழிபாடு
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது . சுவாமி இல்லாத இந்த ஆலயத்தில், 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களே எழுச்சி மூலம் கோவில் உள்ளே சென்று லிங்கம் வைத்து வழிபாடு செய்தனர். எனவே ராமர் கோவில் உருவாவதற்கே மூலகாரணமாகவும் மற்றும் முன் உதாரணமாகவும் ஜலகண்டேஸ்வரர் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஹா சுதர்சன யாகம் நடத்தப்பட்டு, தீபங்களை ஏற்றி வழிபாடுகளை நடத்தினார்கள். அத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரலையிலும் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் பாஜக மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி, மற்றும் பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி, அயோதியில் ராமர் கோயில் அமைவதற்காக வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் மூல காரணமாக அமைந்திருந்தது. என்று நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக ராமர் கோவில் அமைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றும் அவர் கூறினார்.