பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேட்டி

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேட்டி

ஐனநாயகத்தை கட்டி காப்பது காங்கிரஸ்தான் என்று கூறுவது அப்பட்டமான பொய் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேட்டியளித்தார்.


ஐனநாயகத்தை கட்டி காப்பது காங்கிரஸ்தான் என்று கூறுவது அப்பட்டமான பொய் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேட்டியளித்தார்.

ஐனநாயகத்தை கட்டி காப்பது காங்கிரஸ்தான் என்று கூறுவது அப்பட்டமான பொய் - பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி பேட்டி 1975 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி காங்கிரஸ் ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. பாஜக சார்பாக 50 ஆம் ஆண்டு கருப்பு நாள் நினைவூட்டல் கருத்தரங்கம் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ ஆர் மகாலட்சுமி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி கூறுகையில்: ஜனநாயகத்தை கட்டி காப்பது தாங்கள் தான் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். இது அப்பட்டமான பொய். இந்திய அரசியலமைப்பு சட்டங்களை எல்லாம் முழுவதுமே மதிக்காமல் பாரத நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் முக்கியப் புள்ளிகளை எல்லாம் சிறைச்சாலையில் அடைத்து, சிறைச்சாலையாக மாற்றி ஒரு கருப்பு காலத்தை கொடுத்த, ஒரு இருண்ட காலத்தை பாரதத்திற்கு கொடுத்த ஒரு பெரிய ஒரு அவமானம் அவர்கள் செய்தது.

ஜனவரி ஜூன் 25 1975 மார்ச் 21 1977. மக்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு காலமாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அவருடைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களிடம் கூட ஆலோசனையை செய்யாமல், உடனடியாக அவருக்கு ஜால்ரா தட்டுபவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு அவசர நிலை பிரகடனம் செய்தார். இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி தனது பதவியை மீறி அட்டகாசம் செய்தார். ஆனால் 1977-ல் நடைபெற்ற தேர்தலில் அதே ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். இந்த கருப்பு தினத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த கருத்தரங்கம்.

கட்சியை வலுப்படுத்த அடுத்த கட்டமைப்பு குறித்த கேள்விக்கு: அடுத்த தேசிய தலைவர் அறிவித்த பிறகு புதிய கட்டமைப்புகள், வியூகங்கள் வகுக்கப்படும்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பாஜகவுக்கு தொடர்புள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: அவரவர் கருத்துக்களை சொல்கிறார்கள் உண்மை நிலவரம் விரைவில் அறிந்து கொள்வோம் என கூறினார்.

Tags

Next Story