பாஜக தேசிய தலைவர் ரோடு ஷோ

பாஜக தேசிய தலைவர் ரோடு ஷோ

ஐஜேகே வேட்பாளரை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ரோடு ஷோ தேர்தல் பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் , முசிறி துறையூர் சாலையில் ஐஜேகே வேட்பாளரை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ரோடு ஷோ தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி துறையூர் சாலை முதல் திருச்சி நாமக்கல் சாலை கைகட்டி வரை இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நாட்டா தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த ரோடு ஷோ முசிறி துறையூர் சாலை முதல் திருச்சி நாமக்கல் சாலை கைகாட்டி வரை நடைபெற்றது.

Tags

Next Story