ராகுல்காந்தி யாத்திரைக்கு பாஜக இடையூறு -  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேராவூரணி, அண்ணா சிலை அருகில் ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு பாஜ கட்சியினர் இடையூறு ஏற்படுத்துவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு பாரதிய ஜனதா கட்சியினர் இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, அதனைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம் தலைமை வகித்தார். சிறுபான்மை துறை மாவட்டச்செயலாளர் மல்லிப்பட்டினம் நாகூர் கனி முன்னிலை வகித்தார். இதில், வட்டாரத் தலைவர்கள் சேக் இப்ராம்ஷா, இளங்கோ, தூண்டி ஐயப்பன், வெங்கடாசலம், மூத்த நிர்வாகிகள் கே.வி. கிருஷ்ணன், கே.கந்தசாமி, கழனிவாசல் முருகன், பெத்தையன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக நகரத் தலைவர் பொன். நடராஜன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், 'நியாய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20ஆம் தேதி மும்பையில் முடியும் வகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்திவரும் பாதயாத்திரைக்கு பாஜகவினர் இடையூறு ஏற்படுத்துவதோடு, ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story