பாஜக நிர்வாகிகள் உண்ணாவிரதம்
பாஜக நிர்வாகிகள் உண்ணாவிரதம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் முன்பு இரண்டு அடுக்கு வணிக வளாகத்தை கட்ட இருப்பதை கண்டித்து நேற்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற இருந்த நிலையில்,
சிறப்பு அழைப்பாளராக மாநில ஆன்மீக மற்றும் கோவில் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஆர் .நாச்சியப்பன் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவர் வருவதற்கு முன்பாகவே அனுமதி மறுக்கப்பட்டு அனைத்து நிர்வாகிகளையும் கைது செய்து காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அடிப்படை வசதி இல்லாத திருமணம் மண்டபத்தில் பிரித்து அடைத்து வைத்ததாக கூறியும் வந்த நிர்வாகிகளை மிரட்டி வாகனங்களை திருப்பி விட்டதாகவும் கூறி கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் தனியார் திருமண மண்டபத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.