பாஜக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்து பிரச்சாரம் !

பாஜக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்து பிரச்சாரம் !

பாஜக

ஊத்தங்கரை முனியப்பன் கோயிலில் பாஜக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்துபிரச்சாரம் துவக்கினர்.

ஊத்தங்கரை முனியப்பன் கோயிலில் பாஜக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்து பிரச்சாரம் துவக்கினர். பாஜக வேட்பாளர் நரசிம்மனுக்கு துண்டறிக்கை அளித்து வாக்கு சேகரிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முனியப்பன் கோயில் வளாகத்தில் பாரதி ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம் ஆர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் நமது வேட்பாளர் நரசிம்மன் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க கோரி முனியப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்து அங்கிருந்து தேர்தல் துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கி பிரச்சாரத்தை தொடங்கினர்.

இந்த துண்டறிக்கைகளை முனியப்பன் கோவில் தெரு மற்றும் வெங்கடதாம்பட்டி சாலை காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டனர், இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர், , மாநில பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், வடக்கு மண்டல தலைவர் சிங்காரவேல், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், பாமக மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன் , பாமக நகர பொறுப்பாளர் பாஸ்கர், அமமுக நகர செயலாளர் சுரேஷ் ,பாஜக சத்தியமூர்த்தி மற்றும்,ஒபிஸ் அணி மகிலன் தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ் உன்னிடம் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story