ஊத்தங்கரைக்கு ஜனவரி மாதம் பாஜக தலைவர் அண்ணாமலை வருகை-பாஜக ஆலோசனை கூட்டம்
பாஜக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் என் மண்,என் மக்கள் யாத்திரை பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகிற ஜனவரி மாதம் ஊத்தங்கரை வர உள்ளார்.இது சம்பந்தமாக பாஜக கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார்,மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் எம்பி நரசிம்மன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்திற்காக சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் கே பி ராமலிங்கம் கலந்துகொண்டு ஜனவரி மாதம் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஊத்தங்கரைக்கு வருகை தர உள்ளார்.
அன்றைய தினம் பலாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் பாஜக பொறுப்பாளர்கள் கிராமம் தோறும் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் சாதனை திட்டங்களை பிரச்சார வாகன மூலம் விளம்பர செய்ய வேண்டும் என பேசினார். பிறகு சாமல்பட்டி ரயில் நிலையம் உலக தர ரயில் நிலையம் மாற்றப்படும் எனும் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் , சாமல்பட்டி ரயில் நிலையத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் அவர்கள் பார்வையிட்டு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது, சாமல்பட்டி ரயில் நிலையம் சர்வதேச ரயில் நிலையமாக தரம் உயர்த்திய மத்திய அரசுக்கும் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் முதல் திருப்பதி வரை செல்லும் விரைவு கூடிய சீக்கிரத்தில் சாம்பல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக கூறினார்.