காங்கிரஸ் கட்சியை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டம்

நிறவெறிக் கருத்துக்களை கூறி அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

நிறவெறிக் கருத்துக்களை கூறி அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜகவினர் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிறவெறிக் கருத்துக்களை கூறி அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்தும்,

காங்கிரஸ் கட்சியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பாஜகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags

Next Story