பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் , கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சிப்காட் பிரச்சனையில் தமிழக அரசும் , மாசுகட்டுப்பாட்டு வாரியமும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் , 40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காவேரி நீரை வழங்க வேண்டும் எனவும் சிப்காட் பகுதி முழுவதும் ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட பொதுசெயலாளர்ராயல் சரவணன் தலைமையில் , மாவட்ட தலைவர் வேதானந்தம் , நகரத்தலைவர் பூர்ண சந்திரன் உள்பட 200 க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கோஷங்கள் எழுப்பினர்.மேலும் இது தொடர்பான மனுவை அதிகாரிகளிடம் வழங்கினர்