ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்.
ஆர்பாட்டம்
திருப்பூரில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 108.60 பைசாவுக்கு நிறுவனம் மூலம் சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளது. தேங்காயை விற்க கட்டாயத்தில் நிறுவனம் உள்ளது. எனவே மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் கொடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை விநியோகிக்க வேண்டும். வரும் பொங்கல் பண்டிகைக்கு மாநில அரசு தென்னை விவசாயிகளிடம் இருந்து முழு தேங்காய் கொள்முதல் செய்து, பொங்கல் தொகுப்புடன் வழங்கி தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். விவசாய அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் மவுனகுருசாமி, விவசாய அணி மாநில செயலாளர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story