கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் துணை ஜனாதிபதியை இழிவுபடுத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை ஜனாதிபதியை இழிவுபடுத்திய எதிர்கட்சி எம்.பி.,க்கள், காங்.,தலைவர் ராகுலை கண்டித்து பா.ஜ., சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அம்பேத்கர் சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி., அணி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார், செயலாளர் செல்வநாயகம் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் ஹரி, கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் அசோக்குமார், பொருளாளர் ஸ்ரீசந்த், மாவட்ட தலைவர்கள் ஊடகப் பிரிவு மகேந்திரன், ஆன்மிக பிரிவு முருகன், தொழில் பிரிவு பிரதீப் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
