ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பாஜ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாரதப் பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாமல் ஒருதலைபட்சமாக செயல்படும் சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பாரதப் பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு பலர் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சியில் பாரதப் பிரதமரின் ஜல்ஜீவன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் தரமற்ற முறையில் செயல்படுத்தியதாகவும், மேலும் அதே ஊராட்சி பகுதியான நல்லகருப்பன் பட்டியில் ஒன்றாவது வார்டு உறுப்பினராக உள்ள வெங்கடேசன் பாஜக கிழக்கு ஒன்றிய துணைத் தலைவராக இருக்கும் காரணத்தினால், அந்த 1,வது வார்டு பதியில் நலத்திட்டங்களை சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் என்பவர் அந்த வார்டு பகுதியில் எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் செய்யாமல், புறக்கணித்து வருவதாக கூறி தேனி மாவட்டம் பெரியகுளம் பாஜகவினர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

Tags

Next Story