திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்


திருவண்ணாமலையில் பிரசித்திப் பெற்ற சிறந்த தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரத்தின் முகப்பை சீர்குலைக்கும் விதமாக செயல் படும் திமுக அரசையும், இந்து அறநிலையத்துறையையும் கண்டித்து பாஜக.வின் பிரதமரின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை நகரில் உலகளாவிய பிரசித்திப் பெற்ற சிறந்த ஆன்மீக தலமான அருணாச்சலேஸ்வரர் கோயில் முன்பு வணிக வளாகம் அமைத்து நமது புராதான சின்னமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம் மாண்பை சீர் குலைக்கும் விதமாக செயல்படும் ஆளும் திமுகவின் இந்து அறநிலையத் துறையை எதிர்த்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி யம் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நல திட்ட பிரிவின் மாநில செயலாளர் சைதை வ.சங்கர் கலந்துக்கொண்டு, அருணாச்சலேஸ்வரர் கோயில் முன்பு வணிக வளாகம் அமைத்து, நமது புராதான சின்னமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலின் ராஜ கோபுரம் மாண்பை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் திமுக அரசையும், இந்து அற நிலையத்துறையையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது

தி.மலை போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரையும் கைது தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, பின்ப பிற்பகலில் அனை வரையும் விடுவித்தனர். இதில் திருவண்ணா மலை வடக்கு மாவட்டம் ஆரணி வடக்கு மண்டல் தலைவர் குணாநிதி . தெற்கு மண்டல முன்னாள் தலைவர் சேட்டு, தெற்கு மண்டல சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story