சொந்த செலவில் முட்புதர்களை அகற்றிய பாஜகவினர்
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நாளை ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் நகராட்சி நிர்வாகம் செடிகளை அகற்ற முன் வராததால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நாளை ஆற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற இருப்பதால் ஆளை மறைக்கும் அளவிற்கு நாணல் செடிகள் விஷஸ் செடிகள் அதிக அளவில் அடர்த்தியாக இருப்பதால் ஆற்று திருவிழா நடைபெறுவது சந்தேகமாக இருந்து வந்தன.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் அரகண்டநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் தென்பெண்ணை ஆற்றின் இரு பகுதிகளிலும் செடிகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் இருந்து வந்தன அதை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் விழுப்புரம் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் செடிகளை அகற்றி வருகின்றனர். இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு செல்கின்றனர்.