பாஜகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்-ஓய்வு பெற்ற நீதி அரசர் அரி பரந்தாமன்!

பாஜகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்-ஓய்வு பெற்ற நீதி அரசர் அரி பரந்தாமன்!

கருத்தரங்கு

தமிழ்நாடு என்றால் ஒன்று திமுக அல்லது அதிமுக இருவர் தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கோவையில் தமிழ்நாடு பொது மேடை அமைப்பின் சார்பில் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கலந்து கொண்டு பேசினார்.பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.பாராளுமன்றத்திற்குள் நுழைந்து வெற்றிடத்தில் குண்டு வீசினார் பகத்சிங். அதே போல 2023 டிசம்பர் அன்று இரு இளைஞர்கள் நமது பாராளுமன்றத்திற்குள் வண்ண பூச்சுகளை வீசினர். இந்திய மக்களுக்கு மோடியின் மோடி ஆட்சியினை சர்வாதிகாரத்தை கவனத்திற்கு கொண்டு வரும் விதமாக வீசி இருக்கின்றனர் என தெரிவித்தார். மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டுமா என்பது இந்த கருத்தரங்கின் தலைப்பு.

அதற்கான பதில் மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் என நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். குறிப்பாக கோவையில் தமிழ்நாட்டுக்கு தளபதியாக இருக்கக்கூடிய அண்ணாமலை இங்கு வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்தப்படுவது மட்டுமல்ல அவர் டெபாசிட் வாங்காத அளவிற்கு வீழ்த்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.அதற்கான காரணங்களை நீதிபதி அரிபரநரதாமன் பட்டியலிட்டார். தமிழகத்தின் மீது மோடிக்கு சமீப காலமாக காதல் வந்திருக்கிறது எனவும், வாரத்திற்கு இரண்டு முறை வருகிறார் மோடி என தெரிவித்த அவர்,தமிழகத்தில் நவம்பர்,டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தது, சென்னை ,தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், பணமும் மனித இழப்புகளும் ஏற்பட்ட பொழுது பிரதமர் மோடி வரவில்லை. மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டு இருக்கிறது.

இரு இன மக்கள் மோதிக் கொண்டு இருக்கிறார்கள். மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் செல்லவில்லை என தெரிவித்தார். சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் வராதது ஆச்சரியம் இல்லை. மணிப்பூருக்கு கூட செல்லாதவரை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு பைசா வெள்ள நிதி தரவில்லை எனவும், மெட்ரோ திட்டத்திற்காக தமிழக அரசு, மத்திய அரசு பாதி தொகைகளை வழங்க வேண்டும். மெட்ரோ திட்டத்திற்கும் நிதி வழங்காத மோடியை ஏன் தோற்கடிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

கல்வி மாநில பட்டியலுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் சொல்லியிருக்கிறது. அப்படி வந்தால் நீட் இருக்காது என தெரிவித்த அவர், மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தது எல்லாம் திமுக அதிமுக அரசுகள. தமிழகத்தில் ஒரு கல்லூரி கூட மத்திய அரசுக்கு கிடையாது என தெரிவித்தார். ஈழமக்கள் ஒரு லட்சம் பேர் இங்கே வந்திருக்கிறார்கள். தமிழகத்திற்கு வந்தால் குடியுரிமை கிடையாது. இலங்கையில் இருந்து அகதியாக வரும் தமிழ் மக்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில்20 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் இருக்கிறது.மத்திய அரசு ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வைத்திருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர் தமிழில் வழக்காடு நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஏன் அண்ணாமலை அங்கு செல்லவில்லை. இந்த அதிகாரம் ஒன்றிய சர்காரிடம் தான் இருக்கிறது என தெரிவித்த அவர், மெட்ராஸ் ஹைகோர்ட்டை இன்னும் சென்னை தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி நீதிமன்றம் என ஏன் மாற்ற மாட்டேன் என்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

சேலத்தில் பேசும் போது திமுக, காங்கிரஸ் கட்ணிகள் இந்துக்களை அவமதிக்கின்றனர் என்கின்றார் மோடி, மததை பற்றி பிரதமர் பேசிகின்றார் என தெரிவித்த அவர், வைக்கத்தில் தெருவில் நடக்க கூடாது என்ற கட்டுப்பாட்டை போட்டது இந்துவா இல்லையா ? எனவும் கேள்வி எழுப்பினார்.இந்து கருத்து என்பது சாதிய கருத்து அதைதான் வேண்டாம் என்கின்றோம் என தெரிவித்த அவர், மதம் மாறினாலும் சாதி கூட வரும் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் மோடி அரசு வீழ்த்த வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளும் முழுமையாக வெற்றி பெறுவதுடன், குறிப்பாக பிஜேபி டெபாசிட் இழக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு என்றால் ஒன்று திமுக அல்லது அதிமுக, இவர்கள் இருவர்தான் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் , எந்த அகில இந்திய கட்சிக்கும் இடம் இல்லை என்பதை நாம் சொல்ல வேண்டும், அதுதான் நமது எதிர்காலமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.திமுக, அதிமுகவிடம் நிறைய குறைகள் இருக்கலாம் எனவும் அகில இந்திய கட்சியான மோடியை தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும், கோயமுத்தூரில் அண்ணாமலையை தோற்கடிப்பதுடன் இல்லாமல் டெபாசிட் இழக்கவும் செய்ய வேண்டும் எனவும் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story