தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஓா் இடம் கூட கிடைக்கக் கூடாது

தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஓா் இடம் கூட கிடைக்கக் கூடாது
X
மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள்
மக்களவைத் தோ்தலில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜகவுக்கு ஓரிடம் கூட கிடைக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா்.

திருச்சி அருகே சிறுகனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் அவா் மேலும் பேசியது: பாஜகவின் கொள்கைகளையும், மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கையும் தமிழகம் தொடா்ந்து எதிா்த்து வருகிறது.

குறிப்பாக, ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் பாஜக-வுக்கு எதிராக தொடா்ந்து குரல் கொடுத்து வருகின்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளத்திலும் இதேநிலைதான் உள்ளது. நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பாஜக-வுக்கு எதிராக திமுக, மாா்க்சிஸ்ட் கட்சிகள் தொடா்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, தமிழகம், கேரளம் மட்டுமல்லாது தென்மாநிலங்களில் வரும் தோ்தலில் பாஜக-வுக்கு ஓா் இடம் கூட கிடைக்கக் கூடாது. அதற்கேற்ப ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பேசினார்

Tags

Next Story