திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு
அண்ணாமலை சிறப்பு வழிபாடு
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாத சுவாமி கோயில் உள்ளது இங்கு நேற்று மாலை திடீரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். கோயில் வாயிலில் அர்ச்சகர்கள் சிறப்பு வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்றனர். நாகநாத சுவாமி, பிறையனி அம்மன், ராகு பகவான், கிரிகுஜாம்பிகை சன்னதிகளுக்கு சென்று தனித்தனியே அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டதும் கோயில் சார்பாக அவருக்கு சால்வை அணிவித்து சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இங்கிருந்து புறப்பட்ட அவர் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர் அங்கிருந்து திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் வருகை தந்திருந்தனர்.
Next Story