பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது- பாலகிருஷ்ணன்

பாஜக 200 தொகுதிகளில் கூட  வெற்றி பெறாது- பாலகிருஷ்ணன்

 பாலகிருஷ்ணன் 

திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது நிச்சயம், எதிர் அணியில் இருப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள். 200 இடங்களில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மாணிக்கம்தாகூர்,தென்காசி தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார்,ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் இந்திய மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசிய,அவர் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் நமது கூட்டணி அமைந்துள்ளது.

40 தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.அதே நேரத்தில் எதிர் அணியில் இருப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள். இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.ஆனால் காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்த வில்லை.அங்கு தேர்தல் நடத்தினால் பா.ஜ.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. 200 இடங்களில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என அரசியல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அசோகன் எம்.எல்.ஏ. சிவகாசி மேயர் சங்கீதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் செல்வின் யேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டன

Tags

Read MoreRead Less
Next Story