நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி - நயினார் நாகேந்திரன்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி - நயினார் நாகேந்திரன்

 நயினார் நாகேந்திரன் 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் என நயினார் நாகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நாகர்கோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய ஜனதா கூட்டணியில் தற்போது ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம் ஜி கே வாசன் ஆகியோர் உள்ளனர். வேறு யார் இந்த கூட்டணிக்கு வருவார்கள் என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழக வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ரூ. 900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற கணக்கு இதுவரை சொல்லப்படவில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வரும் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதிலிருந்து பாரதிய ஜனதா வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

Tags

Next Story