பாஜக டெபாசிட் கூட வாங்காது: இரா.அதியமான்

பாஜக டெபாசிட் கூட வாங்காது: இரா.அதியமான்

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருச்சியில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் இரா. அதியமான் பங்கேற்றார்.

ஆதி தமிழர் பேரவையின் நாடாளுமன்ற தேர்தல் மத்திய மண்டலத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறுவன தலைவர் இரா அதியமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் சுந்தர்ராஜன், செங்கைகுயிலி, ராசாத்தி அம்மாள், மாநில தூய்மை தொழிலாளர்களின் துணைச்செயலாளர் அறிவழகன் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டியளித்த நிறுவன தலைவர் இரா.அதியமான் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதித்தமிழர் பேரவை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவிக்கிறது. தமிழகத்தில் 40தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கூட்டணி முழுவதுமாக தோல்வியடையும். அவர்கள் டெபாசிட் வாங்குவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் புயல் பாதிப்பதற்காக ஒன்றிய அரசிற்கு தமிழக அரசு 37ஆயிரம் கோடிக்கான பட்டியலை அனுப்பியது. மத்திய அமைச்சர் வந்து பார்த்து சென்றார்கள் ஆனால் இதுவரை ஒரு காசு கூட வரவில்லை. ஆனால் மூன்று முறை பாரதப் பிரதமர் தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பேன், என்றார், ஊழலை ஒழிப்பேன் என்றார் ஆனால் எல்லாம் வேறு நேர் மாறாக நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை மத்திய அரசில் நடைபெறாத அனைத்து ஊழல்களும் தற்போது நடைபெற்று வருகிறது. நடைபெற்ற ஆட்சிகள் குடும்ப ஆட்சி என்று கூறி தற்போது பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாவற்றையும் தனது நண்பர்களுக்கு தாரை வார்த்திருக்கிறார். ஊழலில் நம்பர் ஒன்றாக ஒன்றிய அரசு உள்ளது. சிஏஜி அறிக்கையின்படி ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.

தேர்தல் வருவதால் தற்போது கேஸ்க்கு 100ரூபாய் குறைத்துள்ளனர் முடிந்தவுடன் 500 ரூபாய் ஏத்தி விடுவார்கள். ஒன்றிய அரசு ஊழியக்கெல்லாம் திடீர் திடீரென அகவிலைப்படி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை இந்த ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. எதிர்க்கட்சியான அதிமுக இப்போது போதை பொருள் அதிகமாக இருக்கிறது எனக் கூறி போராட்டம் நடத்துகிறது. போதை பொருட்கள் எல்லாம் குஜராத்தில் இருந்து தான் வருகிறது. குஜராத்தில் இருக்கும் தனியார் துறைமுகத்தில் இருந்து தன் டன் கணக்கில் இந்தியா முழுவதும் போதை பொருள் இன்று அனுப்பப்படுகிறது. இதனை ஒன்றிய அரசு தடுக்குமா. அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை அடிமைகளாக இருந்து விட்டு இன்று வெளியே வந்து ஏதோ ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஓரிடத்தில் கூட டெபாசிட் வாங்காது. கூட்டணி கடை திறந்து வைத்திருக்கார்கள் யாரும் வரவில்லை.

இந்திய கூட்டணியில் கேரளாவில், காங்கிரசும் கம்யூனிஸ்ட் தனித்தனியாக வேட்பாளர் அறிவித்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு? பிரச்சனை இல்லாத கூட்டணி நிச்சயமாக இருக்க வாய்ப்பு இல்லை பாரதிய ஜனதா கட்சியை கூட்டணிலும் பிரச்சனை இருக்கிறது. இந்திய கூட்டணி புதிதாக ஏற்பட்ட தான். அதன் நோக்கம் பிஜேபியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.

Tags

Next Story