பாஜகவின் அதி நவீன ஊழலை மக்களுக்கு சொல்ல வேண்டும் - கீதாஜீவன்

பாஜகவின் அதி நவீன ஊழலை மக்களுக்கு சொல்ல வேண்டும் - கீதாஜீவன்

 இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 

தேர்தல் பத்திரம் மூலமாக பெரிய பெரிய நிறுவனங்களிடம் வருமானவரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை மூலம் பணத்தை பெற்று ஊழல் செய்துள்ள பாஜகவின் அதிநவீன விஞ்ஞான ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ பி சி வி சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அனைத்து இந்திய கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன் இந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் தேர்தல் பத்திரம் மூலமாக பெரிய பெரிய நிறுவனங்களிடம் வருமானவரித்துறை சோதனை அமலாக்கத்துறை சோதனை மூலம் பணத்தை பெற்று ஊழல் செய்துள்ளது பாஜக அதிநவீன விஞ்ஞான ஊழலை இதன் மூலம் செய்துள்ளது பாஜக மேலும் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது எனவும் ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது என்பதை மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் திமுக மருத்துவ அணி தலைவர் அருண்குமார், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story